Wednesday, September 25, 2013

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சந்திரகாசு பேச்சு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சந்திரகாசு பேச்சு


காரைக்கால், செப்.25– காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில், பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். விழாவில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் சந்திரகாசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:– முதல்–அமைச்சர் ரங்கசாமி புதுவை அரசு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இந்த அரசு ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. சிறந்த மாணவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே. எனவே அந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிச்சயம் விரைந்து செயல்படுத்தப்படும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு திட்ட மிட்டுள்ளது. அதுபோன்று ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றவும், ஊதிய முரண்பாடுகளைகளையவும் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், புதுச்சேரி மின்திறல் குழுமம் தலைவர் பி.ஆர்.சிவா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் பெற்றோர் சங்க தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர், தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அசோக் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் கரிகாலன் வரவேற்க, முடிவில் பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்

1 comment: